கோபாலப்பட்டிணம் மக்கா தெரு 1-வது வீதியில் வடிகால் வாய்க்காலை சீரமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.!!



கோபாலப்பட்டிணத்தில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலை சரிசெய்திட வேண்டி பொதுமக்கள் திடீர் சாலை 19.01.2020 செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் மக்கா தெரு 1-வது வீதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக மழைநீர் வெளியேற முடியாமல் வீட்டிற்குள் புகுந்தது. இந்நிலையில் தேங்கி இருந்த மழைநீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் அப்பகுதி உள்ள வயதானோர் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் சாலைகளின் குறுக்கே இரண்டு பக்கமும் தொலைபேசி கம்பம் மற்றும் கயிறு கட்டி வடிகால் வசதியை சீரமைக்கக்கோரி  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த அதிகாரிகள் ஊராட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.வாய்க்காலை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இந்த சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments