தலைமை அலுவலகத்தை காலி செய்ய கூறியதை கண்டித்து புதுக்கோட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம்.!!மாநில தலைமை அலுவலகத்தை முன் அறிவிப்பின்றி அதிகாரிகள் காலி செய்ய கூறியதை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மண்ணடியில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி காலி செய்ய சொல்லி அரசு அதிகாரிகள் வந்து அலுவலகத்திற்கு சீல் வைக்க வைக்க வந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் இதுநாள்வரை உரிய வாடகை தொகை செலுத்தி அலுவலகத்தை நடத்தி வந்த நிலையில் எந்தவித அறிவிப்புமின்றி அதிகாரிகள் உடனடியாக தங்களது தலைமை அலுவலகத்தை காலி செய்ய சொல்லியதை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments