தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஜன.08 (நாளை) புதுகை அரசு மருத்துவக்கல்லூரியில் ஓவிய போட்டி.!தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2021ஆம் ஆண்டிற்கான தேசிய வாக்காளர் தினம் 25.01.2021 அன்று கொண்டாடப்பட விருப்பதாகவும், அதன் ஒரு பகுதியாக கோவிட்-19 தடுப்பு மற்றும் மருத்துவப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவக்கல்லூரி விரிவுரையாளர்கள், களப்பணியாளர்கள், மருத்துவத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளில் பயின்று வரும் மாணவர்களை கௌரவிக்கும் வகையில், அவர்கள் பங்கேற்கும் ஓவியப்போட்டி நடத்திடுமாறு தலைமைத் தேர்தல் அலுவலர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஓவியப்போட்டியின் கருத்து 100 சதவீதம் வாக்களிக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊக்கப்படுத்துதல் ஆகும். ஓவியப்போட்டியில் பங்கேற்க தகுதியானவர்கள் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரி விரிவுரையாளர்கள், (Medical/Para-medical/allied colleges like lab technician, diploma courses etc.,), மேற்குறிப்பிட்ட மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து இனங்களிலும் பயிலும் மாணவர்கள்இ மருத்துவப் பணியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தில் பணியாற்றும் பணியாளர்கள். ஓவியப்போட்டி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 08.01.2021 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும். 

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு இனங்களிலும் பங்கேற்பாளர்களின் படைப்புகளை ஆய்வு செய்து, ஒவ்வொரு இனங்களிலும் சிறந்தவையாக தேர்வு செய்யப்படும் முதல் மூன்று நபர்களை தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்ட குழு  வாயிலாக தலைமைத் தேர்தல் அலுவலர் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்படும். தலைமைத் தேர்தல் அலுவலரின் முடிவே இறுதியானது. மாநில அளவில் தேர்ந்தெடு;க்கப்படும் முதல் மூன்று இனங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.20,000 மும், இரண்டாம் பரிசு ரூ.15,000 மும், மூன்றாம் பரிசு ரூ.10,000 மும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

போட்டியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் அளிக்க வேண்டிய சுய உறுதிமொழிப்படிவம் மருத்துவக்கல்லூரி முதல்வர், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள்) புதுக்கோட்டை, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் உறுதிமொழிப் படிவத்தில் பூர்த்தி செய்து கையொப்பத்துடன் கல்லூரி தலைமை, நிர்வாக அலுவலரிடம் மேலொப்பத்துடன் பங்கேற்க வேண்டும். உறுதிமொழிப்படிவம் இல்லாத படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

மேற்குறிப்பிட்ட ஓவியப்போட்டியில் பங்கேற்று சிறந்த படைப்புகளுடன் பங்கேற்பாளர்கள் பரிசுத்தொகை பெற மாவட்ட நிர்வாகம் சார்பாக  கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments