அம்மாப்பட்டினத்தில் தமுமுக சார்பில் இரத்தவகை கண்டறியும் முகாம்.!!அம்மாப்பட்டினத்தில் தமுமுக சார்பில் இரத்தவகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம் , அம்மாப்பட்டினம் கிளை சார்பில் 06.01.2021 காலை 11.00 மணியளவில் இரத்த வகை கண்டறியும் முகாம் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் MSK சாலிகு  தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட பொருளாளர் அஜ்மல் கான், SMI மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்சா , அம்மாப்பட்டினம் கிளை  தலைவர் அபுதாகிர், கிளை செயலாளர் பாட்சா , கோட்டைப்பட்டினம் கிளை தலைவர் செட்டி ஹாஜா, கோட்டைப்பட்டினம் மமக கிளை செயலாளர் சரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில மீனவர் அணி செயலாளர் ஜெகதை செய்யது கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அம்மாப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் SRM அகமது தம்பி , அம்மாப்பட்டினம் தெற்கு தலைவர் , வடக்கு தெரு ஜமாத் நிர்வாகிகள், பொதுநல பேரவை பேரவை சாவண்ணா, நேஷனல் பந்தல் லுக்குமான் மற்றும் அம்மாப்பட்டினம் ஜமாத் இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments