மெட்ரோ ரயில் புதிய கட்டணம் இன்று பிப்ரவரி (22) முதல் அமல்: நிறுத்தங்களுக்கு இடையிலான குறைக்கப்பட்ட கட்டண விவரம் வெளியீடு



குறைக்கப்பட்ட மெட்ரோ ரயில் கட்டணம், இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் இடையே குறைக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

வண்ணாரப்பேட்டை முதல் விமானம் நிலையம் வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில் சேவை, அண்மையில் விம்கோ நகர் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. மெட்ரோ ரயில்களில் பயணக் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதைக் குறைக்க வேண்டும் எனவும் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று முதல்வர் பழனிசாமி மெட்ரோ ரயில் கட்டணத்தை ரூ.20 வரை குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். குறைக்கப்பட்ட கட்டணம் இன்று (22-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. இதற்கிடையே, ஒவ்வொரு ரயில் நிலையங்களுக்கும் இடையே குறைக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.




இதன்படி, விமான நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் வரை ரூ.10-ம், நங்கநல்லூர் மற்றும் கிண்டி வரை ரூ.20-ம், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம் மற்றும் தேனாம்பேட்டை வரை ரூ.30-ம், ஏஜி-டிம்எஸ், ஆயிரம் விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம், சென்னை சென்ட்ரல், உயர் நீதிமன்றம் மற்றும் மண்ணடி வரை ரூ.40-ம், தியாகராயா கல்லூரி, தண்டையார்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை, டோல்கேட், காலடிப்பேட்டை, திருவொற்றியூர் மற்றும் விம்கோ நகர் வரை ரூ.50-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து ஈக்காட்டு தாங்கல், அசோக் நகர், வடபழனி, அரும்பாக்கம் வரை ரூ.30-ம், சிஎம்பிடி பேருந்து நிலையம், கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, நேரு பூங்கா, எழும்பூர் வரை ரூ.40-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments