தமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு.!



தமிழக நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் அறிவித்தார். அதன்படி தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக  ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

“கொரோனா காலம் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தேர்தல் நடத்துகிறோம். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தலை நடத்துவதில் மருத்துவர்கள், ஊழியர்கள் , செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பெரும் பங்கு இருக்கிறது. தேர்தலுக்காக தமிழகத்தில் 88,936 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் தரைத்தளத்தில் இருப்பதை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.”என்றார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021

தேர்தல் நாள்: ஏப்ரல் 6

வேட்புமனு தாக்கல் தொடக்கம்: மார்ச் 12
வேட்புமனு தாக்கல் நிறைவு: மார்ச் 19

வேட்புமனு பரிசீலனை: மார்ச் 20
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 22 

வாக்கு எண்ணிக்கை:மே 2 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments