மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு.!மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

இதில், 45 வயது முதல் 59 வயதுடையவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி போன்ற நோய் உள்ளவர்களும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 

அவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் பொதுமக்கள் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், நூறு நாள் வேலை திட்ட அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வருமாறு மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஒலி பெருக்கி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டது.

குறிப்பு: 
  • தடுப்பூசி போடப்பட்ட பிறகு அரை மணி நேரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்க வேண்டும்.
  • பிறகு வழக்கம் போல் உங்கள் வீடு அல்லது பணிகளுக்கு திரும்பலாம்.
இந்த இலவச கொரோனா தடுப்பூசியை மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் போட்டுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவல்:
பாண்டிதுரை,
ஹெல்த் இன்ஸ்பெக்டர்,
மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments