மீமிசலில் குறுகலான சந்துக்குள் சிக்கிக் கொண்ட பசுமாடு பத்திரமாக மீட்புமீமிசல் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகாமையில் குறுகலான சந்துக்குள் தலைகீழாக சிக்கிக் கொண்ட பசுமாட்டை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகாமையில் உள்ள இஞ்சி டீ கடை பின்புறம் குறுகலான சந்தில் பசு மாடு ஒன்று தலைகீழாக விழுந்து மாட்டிக்கொண்டது. இதனைக்கண்ட அந்த பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற செயலாளர் ஜெயக்குமாரிடம் தகவல் தெரிவித்தனர். 


இதனையடுத்து ஊராட்சி மன்ற செயலாளர் ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒரு பக்க சுவரை இடித்து பொதுமக்கள் உதவியுடன் சிக்கிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


பசு மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments