அறந்தாங்கி அருகே விஜயபுரம் ஊராட்சியில் குடிநீர் கிடைக்க உதவிய அலுவலர்களுக்கு கிராம மக்கள் பாராட்டு!



அறந்தாங்கி அருகே விஜயபுரம் ஊராட்சியில் உள்ள கோனார் காலனி, ஊராட்சி தெற்கு பகுதியில் மின்சாரம் தடைபட்டதால் அப்பகுதியில் குடிதண்ணீர் வழங்குவதில் தடை ஏற்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிங்காரவேலு, பெரியசாமி ஆகியோர் ஊராட்சியில் உள்ள மின் தடைகளை சரி செய்து தண்ணீர் தொட்டிக்கு குடிநீர் வர நடவடிக்கை எடுத்தனர். 

இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments