3 தொகுதிகளில் அதிமுகவை நேரடியாக எதிர்கொள்ளும் ஐயூஎம்எல்: தொகுதி பட்டியல் வெளியீடு



திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் போட்டியிடும் 3 தொகுதிகள் எவை என்பது இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 187 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் நிகழாத ஒன்று. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 3 தொகுதியில் போட்டியிடவுள்ளது. 3 தொகுதிகள் எவை என்பது இறுதி செய்யப்பட்டு தற்போது ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி வாணியம்பாடி, சிதம்பரம், கடையநல்லூர் ஆகிய தொகுதிகளில் ஐயூஎம்எல் போட்டியிடுகிறது. இந்தக்கட்சி ஏணி சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments