மக்களே.. நாளை மின்தடை கிடையாது…! உத்தரவை ரத்து செய்து அறிவிப்பு…!கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று சனிக்கிழமை (20.05.2023) நடைபெற இருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அறந்தாங்கி கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட துணைமின்நிலையங்களான கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி மேலும் அவற்றைச்சுற்றியுள்ள பகுதிகளில் நாளை சனிக்கிழமை (20.05.2023) நடைபெற இருந்த மின்தடையானது துறை ரீதியான சில தவிா்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறந்தாங்கி மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments