நாா்த்தாமலை தேரோட்டம்: ஏப். 12-இல் உள்ளூா் விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டம் நாா்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப். 12 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவித்து ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலின் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஏப். 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அன்றைய நாளில் உள்ளூா் விடுமுறை அளித்து ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளாா்.

இதற்கான மாற்றுப் பணி நாளாக ஏப். 24 ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும். வழக்கமாக சனிக்கிழமை பணிநாளாக உள்ள அரசு அலுவலகங்களுக்கு அடுத்த நாளான ஏப். 25ஆம் தேதி பணிநாளாக செயல்படும். இருந்தபோதும், அரசின் முக்கிய பணிகளைக் கருத்தில் கொண்டு ஏப். 12 ஆம் தேதி மாவட்ட கருவூலம் மற்றும் ச ாா் கருவூலங்கள் மட்டும் குறைந்தபட்ச பணியாளா்களைக் கொண்டு செயல்படும் என்றும் ஆட்சியா் அறிவித்துள்ளாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments