இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். மருத்துவர்களையும் கூடுதலாக நியமிக்க வேண்டும். நவாஸ்கனி எம்பி கோரிக்கை






இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம் மாவட்ட அரசு பொது மருத்துவமனை, பரமக்குடி, அறந்தாங்கி மற்றும் திருச்சுழி உள்ளிட்ட இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக ஆக்சிஜன் ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்டவைகளை வழங்கவும், மருத்துவர்களை கூடுதலாக நியமிக்கவும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி கோரிக்கை.

இது குறித்து எழுதியுள்ள கடிதத்தில்,

கொரோனா இரண்டாம் அலை பெருகிவரும் நிலையில், தமிழக அரசு தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.

தமிழக அரசின் விரைவான செயல்பாடுகளுக்கும், தங்களின் சிறப்பான களப் பணிக்கும் என்னுடைய நன்றி கலந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ள நிலையில்,
தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில் கடந்த வாரம் நேரில் சென்று ஆய்வு செய்தேன்.

இதில் அரசு பொது மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளபோதும் ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களின் தேவை இருப்பதாக மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம் மாவட்ட அரசு பொது மருத்துவமனை பரமகுடி அறந்தாங்கி திருச்சுழி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மட்டும் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகமாக உள்ளது.

எனவே தற்போது இருக்கும் எண்ணிக்கையை விட கூடுதல் எண்ணிக்கையில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்டவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும், கூடுதலாக மருத்துவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சருக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments