புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபுதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 15ம் தேதி முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் ரூ. 2,000 வழங்கப்பட்டு வருகின்றன. அரிசி அட்டை வைத்துள்ளவர்கள் இந்த நிவாரணம் பெறத் தகுதியானவர்கள் ஆவர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த மே.7ம் தேதி பதவியேற்றுக்கொண்டது. பதவியேற்ற அன்றே கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டை ஒன்றுக்கு முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 5 முக்கியக் கோப்புகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

அதைத்தொடர்ந்து, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், முதல்வரால் 10-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் மாநிலம் முழுவதும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று டோக்கன்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து கடந்த 15ம் தேதி முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் ரூ. 2,000 வழங்கப்பட்டு வருகின்றன. அரிசி அட்டை வைத்துள்ள சுமார் 2.07 கோடி பேர் இந்த நிவாரணம் பெறத் தகுதியானவர்கள் ஆவர். அதன்படி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வினியோகிக்கப்பட்டு டோக்கனில் உள்ள அந்தந்த தேதிகளில் பொதுமக்கள் நிதியை வாங்கி சென்று வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4153.39 கோடி செலவில், மே 2021 மாதத்தில் 2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க ஏற்கெனவே மாண்புமிகு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்

இதனைத் தொடர்ந்து, தற்போது நடைமுறைக்கு வந்துள்ள 2,14,950 புதிய அரிசி குடும்ப அட்டைகளை பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வாழ்வாதாரத்திற்கும் மேற்கூறிய உதவியை வழங்கிடும் வகையில், ரூ.42.99 கோடி செலவில் மே 2021 மாதத்தில் ரூ.2,000/- நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க  முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments