கோபாலப்பட்டிணம் மக்களே! உடனே இந்த நம்பருக்கு உங்க மின்சார மீட்டரை போட்டோ எடுத்து அனுப்புங்க!!மே மாதத்துக்கான மின்சார கட்டணத்தை பொதுமக்கள் மின் மீட்டரை புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் மூலம் மின்வாரியத்திற்கு அனுப்பினால் உங்கள் மின் கட்டணம் தெரிவிக்கப்படும். அதனடிப்படையில் ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் வசதி தற்போது உள்ளது. கொரோனா பரவல் காரணமாக வீடு வீடாக சென்று மின் கணக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

கோபாலப்பட்டிணத்தில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறையும் ரீடிங் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.அதன் படி இப்பொழுது ரீடிங்க் எடுக்கும் நாள் வந்துவிட்டதால்

மீட்டரை புகைப்படம் எடுத்து..

இதன்படி, கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் தங்கள் மின் மீட்டரில் உள்ள கணக்கை தெளிவாக புகைப்படம் எடுத்து wa.me/916379845893 (கிளிக் செய்தால் வாட்ஸ்ஆப் செல்லும்) என்ற மின்வாரிய கணக்கீட்டாளரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு புகைப்படம் மற்றும் சர்விஸ் நம்பரை எழுதி அனுப்ப வேண்டும். பிறகு 6379845893 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு வாட்ஸ்அப் எண்ணிற்கு புகைப்படம் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் அன்றே உங்கள் மின் கட்டணம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.


இவ்வாறு பொதுமக்கள் புகைப்படம் எடுத்து அனுப்பப்படும் விவரங்களை மின்வாரிய அதிகாரிகள் பத்திரமாக பாதுகாப்பார்கள். அதன்பிறகு, மின் கணக்கீட்டுக்கான கட்டண விவரத்தை சம்பந்தப்பட்ட மின்நுகர்வோருக்கு குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் அல்லது இ-மெயில் மூலமாக சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரி அனுப்புவார்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் புகைப்படங்களை வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும் எனவும், மேலும் அலுவலகத்திற்கு நேரில் வருவதை தவிர்க்குமாறு மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் மின் கட்டணத்தை அருகில் உள்ள கம்ப்யூட்டர் சென்டரிலோ அல்லது ஆன்லைன் வாயிலாக அதாவது நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், பேமென்ட் கேட்வே, பாரத்பில் பே மூலமாக செலுத்தலாம்.

முக்கிய குறிப்பு: அதே நேரம், மே மாதத்துக்கான மின் கட்டணம் ஏற்கெனவே ஒரு சிலருக்கு கடந்த 2019 ஆண்டு ஜூன் மாதம் உள்ள கணக்கின்படி பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆகவே தற்பொழுது நீங்கள் இன்றைய நாள் உங்கள் மின் மீட்டரில் உள்ள அளவீடை புகைப்படம் எடுத்து அனுப்பினால் ஏற்கனவே பதிவிட்டுள்ள தொகை நீக்கப்பட்டு தற்பொழுது உள்ள புதிய தொகை பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மீட்டரில் அளவீடை புகைப்படம் எடுப்பது எப்படி?

உங்கள் மின் மீட்டரில் உள்ள பட்டனை அலுத்தக்கூடாது. அதில் வரிசையாக எண்கள் மாறுபடும். அதில் முதலில் தேதி, இரண்டாவதாக நேரம் பிறகு மூன்றாவதாக சில எண்களுடன் KWH என்று வரும். அந்த எண்தான் ரீடிங் யூனிட் அளவாகும். இதை தெளிவாக புகைப்படம் எடுத்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

முதலாவதாக தேதி 

இரண்டாவதாக நேரம்

மூன்றாவதாக ரீடிங் யூனிட்

மீட்டர் மாடல்:
சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள:

GPM மீடியா டீம்

உஸ்மான் ஆலிம், கோபாலப்பட்டிணம்.
போன்: 95242 94171
வாட்ஸ்அப்: wa.me/919524294171

GPM மீடியா: wa.me/918270282723

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments