கோபாலப்பட்டிணத்தில் 4 மணி நேரமாக மின்வெட்டு - பொதுமக்கள் கடும் அவதி






கோபாலப்பட்டிணத்தில் 4 மணி நேர மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிபட்டனர்.

கொரனோ இரண்டாவது பரவலை தடுக்கும் வகையில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையை தவிர மற்ற எதற்கும் வெளியே செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் மின் விநியோக சாதனங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாது என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் இன்று ஜூன் 10 வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 2.15 மணி வரை  4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடையால் கோபாலப்பட்டிணம் மக்கள் அவதி அடைந்தனர். 

ஊரடங்கு காரணமாக வீடுகளில் முதியவர்களும், சிறுவர், சிறுமிகளும் முடங்கிக் கிடக்கின்றனர். மின்தடையால் சிரமத்துக்கு ஆளாகினர். 2.15 பிறகு மின்சாரம் கிடைத்தது .மின்வெட்டு ஏற்படுவதைத் தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments