தமிழகத்திலுள்ள அரசு மருத்துவ மனைகளில் முதல்முறையாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொழிலா ளிக்கு அதிநவீன வசதியுடன் கூடிய ஆஞ்சியோகிராம் மற்றும் ஸ்டென்ட் மூலம் மாரடைப்பு நீக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பன்னோக்கு உயர் மருத்துவச் சிகிச்சை மையம் 2019-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதில், இதயம், மூளை நரம்பியல் உட்பட பல்வேறு துறைகளில் அதிநவீன சிகிச்சை சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இதய நோய் சிகிச்சைத் துறையில் முதல் முறையாக அதி நவீன ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி என்ற தொழில்நுட்பத்துடன் கூடிய சிகிச்சை 10 நாள்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டாரத்திலுள்ள மேலஊரணிபுரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் எம்.செல்லையனுக்கு (56) ஆஞ்சியோகிராம் மற்றும் ஸ்டென்டிங் சிகிச்சை அண்மையில் செய்யப்பட்டது. இதன் மூலம் செல்லையனுக்கு மாரடைப்பு நீக்கப்பட்டு, சிகிச்சையும் வெற்றி கரமாக அமைந்தது.
இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் ஜி.ரவிக்குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:
தமிழக முதல்வரின் வழிகாட்டுத லின்படி, ரூ.1.35 கோடி செலவில் அதிநவீன ஓ.சி.டி. இதய ஆஞ்சி யோகிராம் சிகிச்சை கருவி இம் மருத்துவமனையில் அமைக் கப்பட்டுள்ளது. இதன் மூலம், செல்லையனுக்கு மாரடைப்பு நீக்கப்பட்டுள்ளதுடன், அவரது இதய தசைகளின் உந்தும் திறன் 30 சதவீதத்திலிருந்து 54 சதவீத மாக மேம்பட்டுள்ளது. தற்போது செல்லையன் ஆரோக்கியமாக இருந்தாலும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்புக்காக மருத்துவமனையில் உள்ளார் என்றார்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.