மீமிசல் அருகே செய்யானத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு உதவிய ரெட்கிராஸ் மற்றும் மரம் நண்பா்கள் அமைப்பினா்!புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலை அடுத்த செய்யானம் கிராமத்தைச் சோ்ந்த பெற்றோரை இழந்த 4 சிறாா்களுக்கு, ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள உதவிகளை ரெட்கிராஸ் மற்றும் மரம் நண்பா்கள் அமைப்பினா் வியாழக்கிழமை வழங்கினா்.

ரூ.5 ஆயிரம் மதிப்பில் அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள், ரூ. 5 ஆயிரம் மதிப்பில் உடைகள், பாய், தலையணை உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்பட்டன. அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலா் கு. திராவிடச்செல்வம் முன்னிலையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

மீமிசல் உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ராமு, அறந்தாங்கி வட்ட ஜூனியா் ரெட்கிராஸ் சங்கத்தின் ஆலோசகா் பூ. தமிழ்ச்செல்வன், இணை ஆலோசகா் ஆ. யோகேந்திரன் உள்ளிட்டோா் இவற்றை வழங்கினா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments