கொரோனா தடுப்பூசி போட ‘வாட்ஸ் அப்’ பில் முன்பதிவு! மன்சுக் மாண்டவியா தகவல்!!



கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ‘கோவின்’ வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

வாட்ஸ்அப்பில் ‘Book Slot’ என்று டைப் செய்து மைகவ் இந்தியா கொரோனா உதவிமைய எண்ணான 91-9013151515 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அப்போது பெறப்படும் ஓ.டி.பி. எண்ணை பதிவு செய்து உறுதிப்படுத்த வேண்டும். பின்னர், அடுத்தடுத்து கூறப்படும் வழிகாட்டுதல்படி, தடுப்பூசி போடுவதற்கான நேரத்தை முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments