இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டலம் - ஷிஃபா கிளை நடத்திய இரத்ததான முகாம்!



75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் - ஷிஃபா கிளை மற்றும் கிங் பஹத் மெடிக்கல் சிட்டி இரத்த வங்கி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 13/08/2021 வெள்ளிக்கிழமை அன்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள இரத்த வங்கியில் நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமிற்கு மண்டல தலைமை நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகிக்க, இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளரும் மண்டல சமூக நலத்துறை துணைச் செயலாளருமான அறந்தை சித்திக், ரியாத் மண்டல வர்த்தக அணி செயலாளர் விருத்தாச்சலம் பீர் முஹம்மது ஆகியோர் இரத்ததான முகாமை திறந்து வைத்தனர். மருத்துவரணி செயலாளர் மங்களகுடி தாஹா ரசூல் ஷிஃபா கிளை நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

இந்த இரத்ததான முகாமில் பல சகோதரர்கள் பங்கேற்று தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர். 

இம்முகாமில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த ஜகுபர் சாதிக் மற்றும் அமீர் சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர்.

இந்த இரத்ததான முகாமை ஒருங்கிணைத்த சகோதரர்களுக்கும், முகாமிற்கான உணவு எற்பாடு செய்த ஷிஃபா கிளை சகோதரர்களுக்கும், வாகனம் ரீதியாக உதவி புரிந்த சகோதரர்களுக்கும், பல கிளைகளிலிருந்து இரத்ததான முகாமிற்கு வருகை புரிந்த சகோதரர்களுக்கும், களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும், ஊடக ரீதியாக உதவி செய்த சகோதரர்களுக்கும்,வருகை பதிவேடு பணியை சிறப்பாக முன்னெடுத்து செய்த சகோதரர்களுக்கும்,இரத்த வங்கி செவிலியர்களுக்கு உதவியாளர்களாக செயல்பட்ட சகோதரர்களுக்கும், பரிசுப் பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து வழங்கிய சகோதரர்களுக்கும், முகாமிற்கு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு வழங்கிய மண்டல - கிளை நிர்வாகிகளுக்கும் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ரியாத் மத்திய மண்டலம் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் இது போன்ற ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

மேலும் இரத்ததானம் வழங்கிய அனைத்து சகோதரர்களுக்கும் ரியாத் மத்திய மண்டலம் சார்பாக பாராட்டு சான்றிதழும், பரிசுப்பையும் வழங்கி அனைவருக்கும் நன்றி கூற துவாவுடன் முகாம் இனிதே நிறைவடைந்தது.







தகவல்
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் 
ஊடகப்பிரிவு 
மத்திய மண்டலம் 
ரியாத் - சவூதி அரேபியா

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments