தனியார் பள்ளியில் TC தரவில்லையா? கவலை வேண்டாம்! கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் TC இல்லாமல் சேரலாம்.!



கோபாலப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 2021-2022 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அனைவருக்கும் கல்விச் சட்டத்தின்படி அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதால், தனியார் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், மாற்றுச்சான்றிதழ் (டி.சி.) இல்லாமலேயே அரசு பள்ளிகளில் அவர்கள் படிக்க வேண்டிய வகுப்பில் சேர்ந்து கொள்ள முடியும் என்ற நடைமுறை ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ளது.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர விரும்பினால் மாற்று சான்றிதழ்(TC) தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

தனியார் பள்ளிகளில் படித்து TC இல்லாமல் இருந்தால் ஆதார் கார்டு வைத்து கோபாலப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன்.14 முதல் ஆறாம் வகுப்பு முதல் 11 வகுப்பு வரை 2021-2022-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருவது குறிப்பித்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments