தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் உட்பட 7 மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல்






தமிழகத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால், தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு இயக்குநர் எஸ்.கே.சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, கொரோனா பரவல் குறைந்தபோதிலும், நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா பரவல் நாள்தோறும் அதிகரித்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர். தமிழகத்தில் கோவை, சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் பரவல் அதிகரித்துவருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த மாவட்டங்கள் கவலை அளிக்கக் கூடியவை என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் ஆகிய உருமாற்றம் பெற்ற வகைகள் கவலை அளிப்பதாகவும், மேலும் இரண்டு வகைகள் குறித்து ஆய்வுசெய்து வருவதாகவும் எஸ்.கே.சிங் கூறினார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து மாநிலங்களிடம் கருத்து கேட்டிருந்ததாகவும், ஒரு மாநிலம் மட்டுமே சந்தேகத்துக்குரிய மரணம் இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் லவ் அகர்வால் தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments