ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர் வலையில் சிக்கிய 200 கிலோ ராட்சத பால் சுறா!கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து தினந்தோறும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருவது வழக்கம்.

இந்நிலையில் மீனவர்கள் வழக்கம்போல் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு நேற்று கரை திரும்பினர். அப்போது ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர் வலையில் சுமார் 200 கிலோ எடை கொண்ட ராட்சத பால் சுறா மீன் சிக்கியது. இந்த மீனை அப்பகுதியில் இருந்த வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். 

மேலும் ராட்சத சுறா மீனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்துவிட்டு சென்றனர். இந்த பால் சுறா மீன் அதிக மருத்துவ குணம் கொண்டுள்ளதால் இதனை வாங்கிச் செல்ல வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டினர். 200 கிலோ பால் சுறா மீன் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments