புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கவிதாராமு தகவல்!!



கல்வி உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் இனங்கள் வருகிற 30-ந் தேதிக்குள்ளும், புதியது இனங்களுக்கு வருகிற நவம்பர் மாதம் 5-ந் தேதிக்குள்ளும் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டும்.மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும். 

கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship Portal) புதுப்பித்தலுக்கு வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் செயல்பட தொடங்கும். புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள் நவம்பர் மாதம் 14-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்பிக்கப்பட வேண்டும்.

இதேபோல புதிய இனங்களுக்கு (Fresh) இணையதளம் நவம்பர் மாதம் 16-ந் தேதி முதல் செயல்பட தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 31.12.2021-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்பிக்கப்பட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். 

அரசு இணையதளம் www.tn.gov.in/bcmbcdept என்ற இணையதளத்தில் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments