கோட்டைபட்டினத்தில் மஜக சார்பில் கல்வி உதவி தொகை இலவச பதிவு முகாம்!மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பதிவு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

மனிதநேய ஜனநாயக கட்சி மணமேல்குடி ஒன்றியம் சார்பில் சனிக்கிழமை கோட்டைப்பட்டிணம் செக்போஸ்ட் அருகில் சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பெறும் இலவச பதிவு முகாம் நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்த இம்முகாம் மாவட்ட பொருளாளர் சாஜிதீன் தலைமையில் ஒன்றிய செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் உமர் கத்தாப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ் முதல் பதிவை துவக்கி வைத்தார். கிளை செயலாளர் தாஜீதீன், கிளை பொருளாளர் சுபையர்கான், கிளை து.செயலாளர் சதாம்உசேன் (மன்னார்), மணமேல்குடி MJTS ஒன்றிய செயலாளர் தனபால், மணமேல்குடி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் தமிம் அன்சாரி, ஒன்றிய மருத்துவ அணி செயலாளர் ஜவாகிர்தீன், செயற்குழு உறுப்பினர் ஹைதர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments