கோபாலப்பட்டிணத்தில் (10/10/2021 - நாளை ஞாயிற்றுக்கிழமை) 2 இடங்களில் மாபெரும் மெகா இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
மூன்றாவது அலை நம்மை நெருங்கி கொண்டு இருக்கிறது. இதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நாம் மட்டும் இல்லாமல் நம் குடும்ப உறுப்பினர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள
கோபாலப்பட்டிணத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 10/10/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00மணி முதல் மாலை 5.00மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.
1) கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் வளாகம்
2) கோபாலப்பட்டிணம் கடற்கரை பள்ளிவாசல் அருகில் உள்ள பால்வாடியில்
எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கோபாலப்பட்டிணம் 100% தடுப்பூசி செலுத்திய கிராம்மாக அறிவிக்க பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆகையால் பொதுமக்கள் அனைவரும் முகாமில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அனைவரும் தடுப்பூசி செலுத்த வரும்பொழுது தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள் வரும்போது பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உயிர் கவசம் தடுப்பூசி என்பதை மறவாதீர்!
முகக்கவசம் அணிவோம்!
சமூக இடைவெளியினை பின்பற்றுவோம்!
கிருமி நாசினி மூலம் கைகளை சுத்துப்படுத்துவோம்!!
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.