பேராவூரணியை அடுத்த ஆவணம் கிராமத்தைச் சார்ந்த அப்துல் மஜீத் (57) என்பருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய கடந்த 16/09/21 அன்று திருச்சி காவேரி மருத்துவமணையில் சேர்க்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு (A-ve) இரத்தம் அதிகமாக தேவைப்பட்டதால் அக்குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களை தொடர்புகொண்டு இரத்தம் கேட்டுள்ளனர். பலர் இலவசமாக இரத்தம் தானம் செய்ய முன்வந்துள்ளனர். ஆனாலும் சிகிச்சைக்கான இரத்தம் போதவில்லை. அப்போது கார்த்திக் என்ற நபர் மூன்று யூனிட் இரத்தம் ஏற்பாடு செய்து தருவதாக கூறி ஒரு யூனிட்டுக்கு 2000 என்ற கணக்கில் மூன்று யூனிட்க்கு ரூ.6000 Google Pay (9791590903) உடனடியாக போட சொன்னான் அதனடிப்படையில் ரூ.6000 போட்டுள்ளனர்.
ஆனால் அறுவை சிகிச்சைக்கான குறித்த நேரத்தில் வரவில்லை, போனும் சுவிட்ச் ஆப் செய்திருந்தான். இதனால் ஆப்ரேஷன் தள்ளிப்போனதால் உடல் நிலை மோசமாகி உயிருக்கு ஆபத்தான நிலையை அடைந்து இரணடு நாள் கழித்து இரத்தம் ஏற்ப்பாடு செய்து ஆப்ரேஷன் செய்யப்பட்டது.
மேற்கண்ட மோசடி நபரை மீண்டும் தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி அனுப்பும்படி கேட்டாள் தர முடியாது உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று பேசியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தபோது மேற்கண்ட கார்த்திக் என்ற நபரிடம் போன் மூலமாக விசாரணை செய்தோம், ரூ.6000 பணத்தை ரீபண்ட் செய்வதாக கூறினார் ஆனால் இதுவரை திருப்பி பணம் கொடுக்கவில்லை.
ஆகையால் இந்த கார்த்திக் என்ற மோசடி நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஆவணம் கிளை சார்பில் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.மேலும் ஆன்லைன் மூலமாக சைபர் க்ரைம் மூலமாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: இனி வரும் காலங்களில் தனிநபர்கள் மூலம் இரத்தம் பெற்று தருகின்றோம் என பணம் கேட்டால் கொடுத்துவிடாதீர்கள், விசாரித்து நிதானமாக செயல்படவும், எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வோடு இருக்கவும்.
தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஆவணம் கிளை
தஞ்சை தெற்கு மாவட்டம்
(07/10/2021)
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.