கோபாலப்பட்டிணம் ''மரண அறிவிப்பு'' செய்திகள் சம்மந்தமாக GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு!GPM மீடியாவில் பதிவு செய்யப்படும் பதிவுகளில் மிக முக்கியமான பதிவாக மரண அறிவிப்பு செய்தி உள்ளது.

கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த பலர் தங்களுடைய பொருளாதார தேவை காரணமாக வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கோபாலப்பட்டிணத்தில் நிகழும் இறப்பு செய்திகள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்வதற்காக மரணித்தவரின் பெயர், குடும்ப விபரம், தெருப் பெயர் மற்றும் அடக்க நேரம் பதியப்பட்டு வருகின்றன.

வாசகர்களின் கவனத்திற்கு

பல பேருக்கு யார் மரணித்து விட்டார்கள் என்று கூட தெரியாத நிலை உள்ளது. அதனால் GPM மீடியாவை பொறுத்த வரை ஆண்கள் மரணம் அடைந்தால் புகைப்படங்கள் பதியப்படும். பெண்கள் மரணம் அடைந்தால் புகைப்படங்கள் பதிவு செய்யப்படாது.

அதனடிப்படையில் ஒரு சில நேரங்களில் மரணத்தை தழுவக்கூடிய ஆண் நபர்களின் புகைப்படங்கள் சேகரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே உற்றார், உறவினர்களிடம் மரணித்தவரின் பழைய புகைப்படங்கள் இருக்கும் பட்சத்தில் GPM மீடியா அட்மீன்களின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு புகைப்படங்களை அனுப்புமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்‌.

GPM மீடியா வாட்ஸ்ஆப் நம்பர்: wa.me/918270282723

சில நேரங்களில் இறந்தவரின் புகைப்படங்கள் மற்றும் குடும்பம் விவரம் சேகரிக்க தாமதம் ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் தாமதமாக மரண அறிவிப்பு  செய்திகள் வெளியிடும் சூழ்நிலை ஏற்படுகிறது.

சில வாசகர்கள் உடனடியாக GPM மீடியாவில் செய்தி வரவில்லை என்றால் மீடியா மீது அவதூறு பரப்பும் நிலையைக் காண முடிகிறது.

எனவே சில நேரங்களில் மரண அறிவித்தல் செய்தி வெளியிட தாமதம் ஏற்பட்டாலும், முழுமையான விபரங்களுடனே GPM மீடியாவில் செய்தி வெளியிடப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம். 

ஊர் பள்ளிவாசல் மைக்கில் மரண அறிவித்தல் செய்தி அறிவிப்பு செய்தாலும் அதிகமான நபர்களுக்கு சரியான முறையில் சென்றடைவதில்லை.

இதனால் ஊரில் இருக்கும் அதிகமான நபர்கள் கூறுகையில், GPM மீடியாவில் பதிவிடப்படும் மரண அறிவிப்பு செய்தியை பார்த்து தான் யார் என்று தெரிந்து கொள்கின்றோம் என எங்களிடம் ஏராளமான வாசகர்கள் தெரிவித்தனர். 

மேலும் வெளிநாடு, வெளியூர் வாழ் சகோதரர்கள் கூறுகையில், GPM மீடியா வாட்ஸ்ஆப் குழுமத்தில் பயனிப்பதன் மூலம் ஊரில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் மற்றும் மரண அறிவித்தல் செய்தியை தெரிந்து கொள்கின்றோம் என தெரிவித்தனர்.

உள்ளூர் வாழ் கோபாலப்பட்டிணம் சகோதரர்கள் கவனத்திற்கு...

உள்ளூரில் வாழக்கூடிய சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் மரண‌ அறிவித்தல் செய்தி கிடைக்கும் பட்சத்தில் GPM மீடியா அட்மீன்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு குடும்ப விவரங்களையும் மற்றும் ஆண்கள் மரணித்தவர் என்றால் அவர்களுடைய பழைய புகைப்படங்கள் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வெளியூர் வாழ் கோபாலப்பட்டிணம் சகோதரர்கள் கவனத்திற்கு...

கோபாலப்பட்டிணத்தை சேர்ந்தவர்கள் பல பேர் தொழில் நிமித்தமாக வெளியூரில் இடம் பெயர்ந்து வசித்து வருகிறார்கள். மரணித்தால் சில பேர்  வாழ்ந்த ஊரில் அடக்கம் செய்ப்படுகின்றனர். எனவே மரண‌ அறிவித்தல் செய்தி கிடைக்கும் பட்சத்தில் GPM மீடியா அட்மீன்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு குடும்ப விவரங்களையும், அடக்கம் செய்யப்படும் விவரங்கள் மற்றும் ஆண்கள் மரணித்தவர் என்றால் அவர்களுடைய பழைய புகைப்படங்கள் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வெளிநாடு வாழ் கோபாலப்பட்டிணம் சகோதரர்கள் கவனத்திற்கு...

கோபாலப்பட்டிணத்தை சேர்ந்தவர்கள் பல பேர் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் வேலை செய்து வருகிறார்கள். மரணித்தால் சில பேர்  அந்த நாட்டிலே அடக்கம் செய்ப்படுகின்றனர். எனவே  மரண‌ அறிவித்தல் செய்தி கிடைக்கும் பட்சத்தில் GPM மீடியா அட்மீன்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு குடும்பம் விவரங்கள், அடக்கம் விவரங்கள் மற்றும் ஆண்கள் மரணித்தவர் என்றால் அவர்களுடைய பழைய புகைப்படங்கள் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஜனாஸா தொழுகை மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்தல் ஆகியவற்றின் சிறப்பு...

யார் ஜனாஸா தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு யார் அடக்கம் செய்யப்படும்வரை கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டென நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது இரண்டு கீராத்கள் என்றால் என்ன? என வினவப்பட்டது அதற்கவர்கள் ”இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள்.  

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
(நூல்கள்: புகாரி,முஸ்லிம்)

அன்புடன்...
GPM மீடியா டீம்
கோபாலப்பட்டிணம்
மீமிசல்
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments