11.12.2021ம் தேதிக்குள் முதல் தவணை போடாத அனைவரும் அவசியம் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: புதுகை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!!






11.12.2021ம் தேதிக்குள் முதல் தவணை போடாத அனைவரும் அவசியம் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட்-19 நோய் பரவலை முற்றிலும் தடுத்திட, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை 75 சதவிகிதத்தினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

ஒமிக்கிரான் என்ற கோவிட்-19 புதிய வகை தொற்றினால் 3வது அலை வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனை தடுத்திட தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பிரிவு 71, உட்பிரிவு1ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை அமல்படுத்த உத்தரவிடப்படப்பட்டுள்ளது. 

இப்பொதுசுகாதார கோவிட்-19 தடுப்பூசி
சட்டப்பிரிவின்படி போட்டுக்கொள்ளாதவர்கள் மற்றவர்களுக்கு கோவிட்-19 நோயினை பரப்பும் வகையில், நியாயவிலைகடைகள், வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம், திருமண மண்டபம், தங்கும்விடுதிகள், டீ கடைகள், வங்கிகள், பள்ளி, கல்லுாரிகள், விளையாட்டு மைதானங்கள், துணிகடைகள், கடைவீதிகள், ஓட்டல்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், தனியார் (ம) அரசு மருத்துவமனைகள், அரசு (ம) தனியார் அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

எனவே வரும் 11.12.2021ம் தேதிக்குள் முதல் தவணை போடாத அனைவரும் அவசியம் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், பொது இடங்களுக்கு செல்பவர்கள் தாங்கள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ்களை கையிலோ அல்லது கைபேசியிலோ வைத்திருக்கவேண்டும். மேலும் கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான விசாரணைகள் மற்றும் விபரங்களுக்கு 9498746781,9345333899 என்ற அலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments