ரூ.50,000 கரோனா இழப்பீட்டுத் தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?- தமிழக அரசு விளக்கம்




தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அரசு அறிவித்துள்ள ரூ.50,000 இழப்பீட்டை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துப் பெறுவது எப்படி என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பின் விவரம் பின்வருமாறு:


தமிழ்நாடு அரசின் சார்பில் கரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் “வாட்ஸ் நியூ (what's new) பகுதியில் “Ex-Gratia for Covid-19” என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments