கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஒவ்வாரு வாரமும் 2 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்திப்படுகிறது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், கோபாலப்பட்டிணத்தில் முதல் டோஸ் செலுத்தியவர்கள் (இன்னும் 84 நாட்கள் கடந்து) இரண்டாவது டோஸ் செலுத்தாமல் அதிகமான நபர்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்தாதவர்கள் செலுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் முதல் டோஸ் செலுத்தாதவர்கள் அனைவரும் கட்டாயம் செலுத்தி கொள்ளுங்கள்.
மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கோபாலப்பட்டிணம் 100% தடுப்பூசி செலுத்திய கிராமமாக அறிவிக்க பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆகையால் பொதுமக்கள் அனைவரும் முகாமில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அனைவரும் தடுப்பூசி செலுத்த வரும் பொழுது தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள் வரும்போது பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உயிர் கவசம் தடுப்பூசி என்பதை மறவாதீர்!
முகக்கவசம் அணிவோம்!
சமூக இடைவெளியினை பின்பற்றுவோம்!
கிருமி நாசினி மூலம் கைகளை சுத்துப்படுத்துவோம்!!
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.