கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் அரண்மனை தோப்பின் ஊற்று நீர்!தமிழகம் முழுவதும் மழை பெய்தாலும் சில ஊர்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. தினந்தினம் குடிநீர் கேட்டு மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதை பார்க்க முடிகிறது. கூட்டுக்குடி நீர்த் திட்டம் உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் இருந்தாலும், மக்களின் குடிநீர்த் தேவையைப் போக்க முடியாத அவலநிலைதான் தொடர்ந்து நீடிக்கிறது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கடந்த பல ஆண்டுகளாகக் குடிநீருக்காக நீண்ட தூரம் நடந்து சென்று ஊற்று தோண்டி குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டிணம்-மீமிசல் இடையே சில ஏக்கர் பரப்பளவில் அரண்மனை தோப்பு உள்ளது.சில அடி தூரம் கடல் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பகுதிக்குத்தான் பெண்கள் வீட்டிலிருந்து காலிக்குடங்களுடன் நடைப்பயணம் செல்கின்றனர். அங்கு சென்றவுடன் காலிக்குடங்களை வரிசையாக அடுக்கிவைக்கின்றனர். பின்பு, அங்குள்ள மணல் திட்டில் பள்ளம் தோண்ட ஆரம்பிக்கின்றனர்.

அனைவருமாகச் சேர்ந்து 3 முதல் 5 அடி வரையிலும் பள்ளம் தோண்டுகின்றனர். 3 அடிக்கு மேல் தோண்டும்போது தண்ணீர் ஊற ஆரம்பிக்கிறது. 4 அடிக்குச் செல்லும்போது தெளிவான தண்ணீர் கிடைக்கிறது. கிடைக்கும் ஊற்று நீரை அகப்பையைக் கொண்டு வடிகட்டி குடங்களில் சேகரிக்கின்றனர். ஒவ்வொருவராக  நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீரை நிரப்பிக்கொண்டு நடைப்பயணமாக வீட்டுக்குத் திரும்புகின்றனர். வயதான பாட்டி முதல் இளம் வயது பெண்கள் வரையிலும் அனைத்துத் தரப்பினரும் தண்ணீரை எடுத்துச் செல்கின்றனர். "உடலுக்கு ஆரோக்கியமான குடிநீரை எடுப்பதற்காக, எவ்வளவு மைல் தூரம் வந்தாலும் எங்களுக்குச் சுமை பெரிதாகத் தெரியாது" என்கின்றனர் கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள்.
பலரும் வீட்டில் சமைப்பதற்கும் மற்றும் குடிப்பதற்கும் இந்த நீரைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சுத்தமான ஊற்றுத் தண்ணீரைக் குடிப்பதால், எந்த நோய்களும் எங்களுக்கு வருவதில்லை மேலும் நீண்ட ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். 1 கி.மீ சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்று ஓர் அகப்பை ஊற்றுத் தண்ணீரைக் குடித்துவிட்டால் போதும் நடந்து வந்த களைப்பு எல்லாம் நீங்கிவிடும். எல்லா ஊர்லயும் மினரல் வாட்டர் கேன்களை விற்பனைக்குக் கொண்டு செல்கின்றனர். அதே போல எங்கள் ஊருக்கும் குடம் ரூ.10 என்று மினரல் வாட்டர் கொண்டு வருவார்கள். ஆனால், பெரும்பாலும் நாங்கள் யாரும் வாங்க மாட்டோம். எவ்வளவு சிரமம் இருந்தாலும், தண்ணீர் எடுக்கப் போகாமல் இருக்க மாட்டோம் என்று மக்கள் கூறுகின்றனர்.
வெயில் காலங்களில் சுமார் 4 அடி முதல் 6 அடி வரை பள்ளம் தோண்டினால் தான் தண்ணீர் வரும். வெளியிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் நேரத்தில் நிலத்தடி நீரின் அளவு குறைந்து காணப்படும். ஆகையால் குறைந்த அளவே தண்ணீர் ஊறும் இதனால் மக்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடந்து குடிதண்ணீர் எடுத்து செல்வார்கள். ஆனால் மழைக்காலங்களில் 1 அடியிலே வேகமாக குடிநீர் ஊறுவதால் கால தாமதமின்றி எடுத்து செல்கின்றனர்.
என்னதான் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் (மினரல் வாட்டர்) வந்தாலும் அதிகமான மக்கள் பழமை பாராமல் ஊற்று தண்ணீரையே பருகி வருவது குறிப்பிடத்தக்கது. அதே போன்று அளவுக்கு அதிகமாக தாகம் இருந்து எவ்வளவு சொம்பு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் (மினரல் வாட்டர்) குடித்தாலும் தாகம் தனியாவே தணியாது. ஆனால் ஒரு சொம்பு ஊற்று தண்ணீர் குடித்ததால் தாகம் அப்படியே தணிந்துவிடும். இந்த சுவை மிகுந்த ஊற்று தண்ணீருக்காக இப்பொழுதும் வெளியூறுகளில் மற்றும் வெளிநாடுகளில் வாழும் மக்கள் ஏங்கிக்கொண்டு தான் இருக்கின்றனர். 
தற்போது மழை காலங்களில் குட்டி ஊற்றாக பார்பதற்கு அழகாக காட்சியளிக்கிறது.

வெயில் காலங்களில் ஊற்றின் அமைப்பு:

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments