தமிழகத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்து உள்ளார்.
வாக்காளர் இறுதி பட்டியல்
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டன. ஜனவரி 1-ந் தேதி வாக்காளராகும் தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்காக, வரைவு வாக்காளர் பட்டியல் 2 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதில், ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.09 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.19 கோடியும் ஆகும். மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 342 ஆகும்.
10 லட்சம் பேர் விண்ணப்பம்
இந்த நிலையில், புதிய வாக்காளர்கள் தங்களின் பெயரை சேர்க்கவும், ஏற்கனவே பதிவு செய்திருந்த வாக்காளர்கள் தங்கள் பெயரில் தவறு இருந்தால் திருத்திக்கொள்ளவும், முகவரி மாறியவர்கள் அதற்கான திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதற்காக, தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் வாக்காளர் இறுதி பட்டியல் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று அறிவித்தார்.
இணையதளத்திலும் பார்க்கலாம்
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு மேல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிடுவார்கள். இந்த வாக்காளர் பட்டியலை இணையதளத்திலும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும். வாக்காளர்கள் அவற்றில் தங்களின் பெயர் விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.