விவசாய மின் இணைப்பு திருத்த முகாம் நாளை நடக்கிறது
   புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர் மற்றும் திருமயம் மின்கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள், இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்திருந்தால் அதில் உள்ள பெயர், புல எண், முகவரி உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்ய விவசாய மின் இணைப்பு திருத்த முகாம் நாளை(வியாழக்கிழமை) காலை 10 முதல் மாலை 5 மணி வரை அந்தந்த கோட்ட அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
அதுசமயம் பெயர் மாற்றம் செய்ய, இறப்பு சான்று, வாரிசு சான்று, கூட்டு பட்டாதாரர்களாக இருந்தால் அவர்களது ஆட்சேபனையின்மை கடிதம், கிராம நிர்வாக அலுவலரிடம் கிணறு, நில வரைபடம், உரிமைசான்று, கணினி சிட்டா ஆகியவை கொண்டு வர வேண்டும். மேலும் சர்வே எண் மாற்றத்திற்கு பழைய புதிய கிணற்றின் கிராம நிர்வாக அலுவலர் சான்று, நில வரைபடம், உரிமைசான்று, கணினி சிட்டா, கூட்டு பட்டாதாரர்களாக இருந்தால் அவர்களது ஆட்சேபனையின்மை கடிதம் ஆகியவை கொண்டு வர வேண்டும். மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments