ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எதிரொலி : மீமிசல் கடை வீதிகளில் பொருட்களை வாங்கக் குவிந்த மக்கள்:






ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு  எதிரொலியால் மீமிசல் கடை வீதிகளில் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடைகள், ஓட்டல்கள், சினிமா திரையங்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்திருக்கிறது. 
இந்நிலையில் நாளை ஜனவரி 09 ஞாயிற்றுக்கிழமை  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் மளிகை உள்ளிட்ட வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு முக்கிய வீதிகளில் மக்கள் திரண்டனர்.  

இதேபோன்று மீன், இறைச்சிக் கடைகளிலும் பொதுமக்கள் திரண்டனர். முன்கூட்டியே வாங்கி வைக்கும் நோக்கில் கூட்டம் அலைமோதியது. பொங்கலை முன்னிட்டுப் பொருட்கள் வாங்கும் கடைகளிலும் மக்கள் காணப்பட்டனர். 






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments