கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த நெய்னா முகம்மது அவர்களுக்கு மருத்துவ நிதி உதவிக்காக உடனடியாக உதவிடுவீர்!


கோபாலப்பட்டிணத்தை சேர்ந்தவருக்கு மருத்துவ நிதி உதவிக்காக உடனடியாக உதவிடுவீர்!

பதிவு நாள்: 03-02-2022 வியாழக்கிழமை

அன்புள்ள சகோதர சகோதரிகளே,

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கடற்கரை பகுதியில் வசித்து வரும் மருத்துவ ஆலோசகராக இருந்து வரும் நெய்னா முகம்மது அவர்களுக்கு  கடந்த சில நாட்களுக்கு முன் நெஞ்சுவலி ஏற்ப்பட்டது. இதனையடுத்து  ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு வாழ்வுகளில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் அதை சரி செய்ய ஸ்டண்ட் வைக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மருத்துவ காப்பீடு மூலம் சில தொகைகள் வழங்கப்படும் எனவும் அது போக மீதம் ரூபாய் 80000 (என்பது ஆயிரம்) முதல் 1,00,000 (ஒரு லட்சம்) ரூபாய் வரை பணம் தேவைப்படுகிறது.

தற்பொழுது தேவைப்படும் பொருளாதாரம் அந்த குடும்பத்தாரிடம் இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதாரம் கிடைத்துவிட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என குடும்பத்தினர்  தெரிவித்துள்ளனர்.

இன்ஷா அல்லாஹ் நாளை 04.02.2022 வெள்ளிக்கிழமைக்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை ராகவேந்திரா மருத்துவமனையில் ஸ்டண்ட் அமைப்பதற்க்கான சிகிச்சை செய்யப்பட உள்ளது.

ஆகவே தங்களால் முடிந்த ரூபாய் 10, 50, 100, 500, 1000 என இயன்ற நிதி உதவியை அளித்து மருத்துவர் நெய்னா முகம்மது அவர்களுக்கு நல்ல முறையில் மருத்துவ சிகிச்சை பெற்று இப்பூமியில் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு அனைவரும் உதவிடுங்கள்.

GPM மீடியா சார்பில் தகவல் உறுதி செய்யப்பட்டது. 

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லாம் மனிதரை வாழவைத்தர் போல ஆவார்.

எனவே உதவ எண்ணுவோர், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் பே, போன்பே, வழியாகவோ அல்லது வங்கி கணக்கு மூலமாகவோ நல் உள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகள் உங்களால் முடிந்த பண உதவிகள் செய்ய வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இப்பதிவை தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் தாங்கள் பயணிக்கும் வாட்சப் குழுக்களிலும் பகிர்ந்து உதவிடுங்கள்.

விரைந்து நிதி உதவி கிடைத்து மருத்துவ சிகிச்சை பெற்று பூரண நலத்துடன் வீடு திரும்ப அனைவரும் பிராத்திப்போம்...

எந்த நேரத்தில் சென்றாலும் மருத்துவ ஆலோசனை வழங்குவார். மேலும் மேற்கட்ட சிகிச்சைக்கான  பரிந்துரையும் செய்வார்  என்பது குறிப்பிடத்தக்கது.

உதவிடுங்கள் நண்பர்களே.

வங்கிக் கணக்கு விபரம்:

Account Number :38384006195

Account Name : Birose khan

Bank Name: State Bank of India

Branch Name :  Mimisal 

District : Pudukkottai ,  TamilNadu , India

IFSC: SBIN0004892

G PAY:8870954808


மேலும்  தொடர்புக்கு : 8870954808 பைரோஸ் (நெய்னா முகம்மது அவர்களின் மகனார்)

குறிப்பு: QR கோடை ஸ்கேன் செய்து நீங்கள் நேரடியாக அந்த அக்கவுண்ட்டில் பணம் அனுப்பலாம். அதில் பைரோஸ் கான் (Birose Khan) என்று ஆங்கிலத்தில் வரும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments