ஜெகதாப்பட்டினம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நின்று செல்ல அனுமதி- அரசு போக்குவரத்து கழகத்திற்கு, தவ்ஹீத் ஜமாத் நன்றி




ஜெகதாப்பட்டினம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நின்று செல்ல அனுமதி- அரசு போக்குவரத்து கழகத்திற்கு, தவ்ஹீத் ஜமாத் நன்றி தெரிவித்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் சில வருடங்களாக நிற்காமல் செல்கிறது. அதற்கு 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜெகதாப்பட்டினம் கிளை சார்பாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு செய்யப்பட்டு அந்த மனுவை பரிசீலித்த தமிழக அரசு அனைத்து அரசு பேருந்துகளும் ஜெகதாபட்டினம் பேருந்து நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று ஆணையிட்டார்கள்.







அதற்கு பிறகும் பேருந்து நிற்காமல் சென்றது, மீண்டும் மாவட்ட ஆட்சியர் இடத்தில் குறைதீர்ப்பு நாளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜெகதாப்பட்டினம் கிளை சார்பாக மனு செய்யப்பட்டது, அதற்கு பிறகு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மீண்டும்  மனு செய்திருந்தும் நடவடிக்கை இல்லை.

 இறுதி முயற்சியாக 09.03.2022 அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜெகதாப்பட்டினம் கிளை நிர்வாகிகள் மற்றும் ஜெகதாப்பட்டினம் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் சேர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்திற்கு நேரில் சென்று கிளை மேலாளர்  ராஜ்மோகன் அவர்களிடத்தில் மனு அளிக்கப்பட்டது. அவர்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்தார்கள். 

அதைத் தொடர்ந்து நேற்று 10.03.2022,  கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பாக சோதனை ஆய்வாளர்கள் (Checking inspector) இரண்டு பேர் ஜெகதாப்பட்டினத்திற்கு நேரில் வந்து அனைத்து அரசு பேருந்துகளும் நின்று செல்ல வழிவகை செய்கிறார்கள்.   தற்போது அனைத்து அரசு பேருந்துகளும் நின்று செல்கிறது.

இதற்காக நடவடிக்கை எடுத்த கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர்    ராஜ்மோகன் அவர்களுக்கும், ஜெகதாபட்டினத்தில் பணியில் உள்ள   சண்முகராஜ், சிவநேசன் சோதனை ஆய்வாளர்களுக்கும்,  உள்ளூர் சுன்னத் ஜமாத் நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜெகதாப்பட்டினம் கிளை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் சமுதாய பணியில்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
ஜெகதாப்பட்டினம் கிளை, 
புதுக்கோட்டை மாவட்டம்.
8973712460, 9865356722
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments