பாப்புலா் பிரண்ட் அமைப்பினா் அனுமதியின்றி பேரணி; 1200 போ் கைது




அனுமதியின்றி பேரணி நடத்த முயற்சித்ததாக பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் தங்களது 15 ஆவது ஆண்டு தொடக்கத்தையொட்டி, மக்களாட்சியைப் பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி ஒற்றுமைப் பேரணியை வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நடத்த அனுமதி கோரியிருந்தனா். போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை.


இந்நிலையில், திட்டமிட்டபடி வியாழக்கிழமை மாலை பிரகதம்பாள் அரசுப் பள்ளிக்கு அருகே பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் கூடினா். சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்தப் பேரணியில் பங்கேற்றனா். பேரணிக்கு, மாவட்டத் தலைவா் அபுபக்கா் சித்திக் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ஹாலித்முகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேரணி பழைய பேருந்து நிலையம் அருகே வந்தபோது, அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸாா் பேரணியைத் தடுத்து நிறுத்தினா். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களைக் கைது செய்வதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.

போராட்டக்காரா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து 1200 போ் கைது செய்யப்பட்டனா். திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்ட அவா்கள், படிப்படியாக இரவில் விடுவிக்கப்பட்டனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments