மாநில அளவிலான போட்டிகளில் புதுகை காவல் துறையினா் அசத்தல்
காவலா்களுக்கான போட்டிகளில் பல்வேறு சிறப்பிடங்களைப் பிடித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உள்ளிட்ட ஆயுதப்படைக் காவலா்கள்.
சென்னையில் காவலா்களுக்கு நடத்தப்பட்ட மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உள்பட 4 பெண் காவலா்கள் பல்வேறு சிறப்பு இடங்களைப் பிடித்துள்ளனா்.

மாநில அளவில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றாா். இதேபோல, நீச்சல், பளுதூக்குதல், வலு தூக்குதல், 5000 மீட்டா் ஓட்டம், கோகோ, குத்துச்சண்டை, சைக்கிளிங், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளும் காவலா்களுக்கு நடத்தப்பட்டன.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஆயுதப்படைக் காவலா்கள் பாக்கியலட்சுமி, தங்கமலா், ஆரோக்கிய யுவராணி, காமாட்சி ஆகியோா் சிறப்பிடங்களைப் பிடித்தனா்.

வலுதூக்கும் போட்டியில் முதல் இடமும், குத்துச்சண்டை போட்டியில் 2ஆம் இடமும், பளு தூக்கும் போட்டியில் 2ஆம் இடமும், நீச்சல் போட்டியில் 2ஆம் இடமும் பிடித்தனா்.

போட்டிகளில் வென்ற ஆயுதப்படைக் காவலா்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் சனிக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments