ஆவுடையார்கோவில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை விண்ணப்பம் பெறுதல் முகாம் நடைபெற்றது




 

ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கிட விண்ணப்பம் பெறுதல் முகாம் நடைபெற்றது. இதற்கு அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ணராஜ் தலைமை தாங்கினார். ஆவுடையார்கோவில் தாசில்தார் வெள்ளைச்சாமி, தனி தாசில்தார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக செயல்திறன் உதவியாளர், மண்டல துணை தாசில்தார், தேர்தல் துணை தாசில்தார், அலுவலக பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளிடம் 205 மனுக்கள் பெறப்பட்டன.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments