வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. புதிய விலை என்ன?




சிலிண்டர் விலை உயர்வுசிலிண்டர் விலை உயர்வு

பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. கடந்த 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து அந்நாட்டு மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்றும் 5 மாநில தேர்தலுக்கு பின் இந்த உயர்வு இருக்கலாம் என்றும் பேசப்பட்டது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டது.


இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து கழகம், தொழிற்சாலைகளுக்கு நேரடியாக வழங்கப்படும் டீசல் விலையை 25 ரூபாய் உயர்த்தியது. அதன்படி ஒரு லிட்டர் டீசல் ரூ.116.88க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவவம்பர் 5ஆம் தேதி முதல் 137 நாட்களாக தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81, டீசல் ரூ.91.88 என்ற விலை தொடர்ந்து நீடித்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 16 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, 5 மாதங்களுக்கு பிறகு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 967.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments