கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் பகுதியில் பராமரிப்பின்றி கிடக்கும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார கழிவறை!கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் பகுதியில் பராமரிப்பின்றி கிடக்கும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார  கழிவறை!

கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் பகுதியில் பராமரிப்பின்றி கிடக்கும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார  கழிவறையை சரி செய்ய கோரிக்கை வைக்கப்படுகிறது.
   
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் பகுதியில் பெண்கள் பயன் பெரும் வகையில் பொது கழிவறை கட்டப்பட்டுள்ளது. 

இந்த கழிவறையானது தண்ணீர் வசதியின்றியும், பராமரிப்பின்றியும் மக்கள் உபயோகப்படுத்த இயலாத நிலையிலும் மேலும் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டும் காணப்படுகிறது.

கழிப்பறை பராமரிப்பு இல்லாததால் சிறியவர்கள் முதல் இளம்பெண்கள் ,பெரியவர்கள் என அனைவரும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலை உருவாகியுள்ளது.இதனால் சுகதாரக்கெடு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே இதுகுறித்து நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மீண்டும் மக்கள் பயன்பெறும் வகையில் கழிவறையை சரி செய்து பராமரிக்க வேண்டும் எனவும் கிராம மக்களிடையே கழிவறை பயன்பாட்டின் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் GPM மீடியா சார்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments