மீமிசல், அம்பலவானேந்தல் சுற்றுவட்டார பகுதியில் நாளை ஜூன்.28 சிறப்பு பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிப்பு.!
    அறந்தாங்கி உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 110/33-11 KV கொடிக்குளம் துணையின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் 11.KV அம்பலவானேந்தல் மற்றும் 11 KV மீமிசல் மின் பாதைகளில் சிறப்பு பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறந்தாங்கி உபகோட்டத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள 110/33-11 KV கொடிக்குளம் அறந்தாங்கி துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெரும் 11KV அம்பலவானேந்தல் மற்றும் 11KV மீமிசல் மின் பாதைகளில் உள்ள அம்பலவானேந்தல், கரகத்திக்கோட்டை, மஞ்சக்குடி, பரனூர், மணலூர், மூவனூர், சீகனேந்தல், மீமிசல், கோபாலப்பட்டிணம், கோடகுடி, குமரப்பன்வயல், செய்யானம், வேள்வரை வெளிவயல், நாட்டானிபுரசக்குடி, ஆர்.புதுப்பட்டினம், அரசநகரிப்பப்டினம், பொன்னமங்களம் ஆகிய பகுதிகளில் நாளை 28.06.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று சிறப்பு பராமரிப்பு பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் எனவும்,மேலும் இப்பகுதிகளில் உள்ள பொது மக்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் இம்மின்நிறுத்தம் காரணமாக ஏற்படும் சிரமங்களை பொருத்துக் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்திற்கு தங்களின் மேலான ஒத்துழைப்பை நல்குமாறு
 கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பு: "கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது"

கொடிக்குளம் உதவி பொறியாளரிடம்  GPM மீடியா சார்பில் மின்தடை குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டது.

தகவல்: 
உதவி செயற்பொறியாளர் இயக்கலும் & காத்தலும் கிராமியம்/அறந்தாங்கி


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments