ஆவுடையார்கோவில் அருகே அரசு பேருந்தும் - லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
ஆவுடையார்கோவில் அருகே அரசு பேருந்தும் - லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட சாத்தியகுடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகாமையில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் படுகாயத்துடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பேருந்து ஓட்டுநர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆவுடையார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments