‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே நகர தலைவர் இப்ராகிம்பாபு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆலங்குடி, அறந்தாங்கி

இதேபோல் ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வடகாடு முக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராம.சுப்புராம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆலங்குடி பேரூர் நகர செயலாளர் அரங்குளநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் (புள்ளான்விடுதி) பன்னீர்செல்வம், (வடகாடு) மணிகண்டன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

அறந்தாங்கியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கந்தர்வகோட்டை, விராலிமலை, பொன்னமராவதி

கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் தலைவர்கள் மாயக்கண்ணன், ராமையா, சரவணமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் குன்னண்டார்கோவில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள், கறம்பக்குடி வட்டார காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். விராலிமலை வட்டார காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொது செயலாளர் பெண்ணெட் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் ஏழுமலை, சர்தார் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பலர் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் பழனியப்பன், வட்டார தலைவர் கிரிதரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக திருமயம் முன்னாள் எம்.எல்.ஏ.வும், புதுக்கோட்டை மாவட்ட தலைவருமான ராம.சுப்புராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments