புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 87.41 சதவீதம் பேர் தேர்ச்சி மேலும் மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் பின்னடைவு 27-வது இடம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 87.41 சதவீதம் பேர் தேர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 87.41 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 39 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றது.

87.41 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 175 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 225 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதினர். இதில் 17 ஆயிரத்து 678 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 87.41 சதவீதம் ஆகும்.

மாநில அளவில் 27-வது இடம்

பிளஸ்-1பொதுத்தேர்வில் மாநில அளவில் புதுக்கோட்டை 27-வது இடத்தை பிடித்தது. இதற்கு முன்பு கடந்த 2019-20-ம் கல்வியாண்டில் 21-வது இடத்திலும், 2018-19-ம் கல்வியாண் டில் 20-வது இடத்திலும் இருந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் பின்னடைவு
புதுக்கோட்டை மாவட் டத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வில் கடந்த 2019-20-ம் கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் 95.87 சதவீதமாக இருந்தது. கடந்த 2018-19-ம் கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் 94.89 சதவீதமாக இருந்தது. இதனை இந்த 2 ஆண்டுடன் ஒப்பிடும்போது தேர்ச்சி விகிதத்தில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள் ளது. தற்போது 87.41சதவீதம் தேர்ச்சியையே பெற்றுள் ளது. இதேபோல் எஸ்.எஸ். எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளிலும் தேர்ச்சி விகி தம் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்திருந் தது. கொரோனா பரவல், பள்ளிகள் முழுமையாக திறக்கப்படாதது, பாடங் களை முழுமையாக மாண வர்கள் கற்காதது உள்ளிட்ட வற்றால் தான் மாணவர்க ளின் தேர்ச்சி விகிதம் குறைந்ததாககூறப்படுகிறது. இருப்பினும் இந்த கல்வி ஆண்டில் தேர்ச்சி விகி = தத்தை அதிகரிக்க அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வி யாளர்களின் கோரிக்கை யாக உள்ளது. எஸ்.எஸ்.எல். சி.. பிளஸ்-1, பிளஸ்-2வகுப்பு மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, அவர்கள் உரிய மதிப்பெண்களை பெறச்செய்வதோடு தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து மாவட்டத்தை முன்னேற் றமடைய செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர் களின் கோரிக்கையாக உள் ளது.


கல்வி மாவட்டம் வாரியாக அறந்தாங்கியில் 3 ஆயிரத்து 444 மாணவர்களில் 2 ஆயிரத்து 801 பேரும், 3 ஆயிரத்து 576 மாணவிகளில் 3 ஆயிரத்து 395 பேரும் என 6 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி பெற்றனர். இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 753 மாணவர்களில் 2 ஆயிரத்து 124 பேரும், 2 ஆயிரத்து 824 மாணவிகளில் 2 ஆயிரத்து 618 பேரும் என 4 ஆயிரத்து 742 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாணவிகள் முன்னிலை

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 559 மாணவர்களில் 2 ஆயிரத்து 933 பேரும், 4 ஆயிரத்து 69 மாணவிகளில் 3 ஆயிரத்து 807 பேரும் என 6 ஆயிரத்து 740 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த மாணவர்கள் 9 ஆயிரத்து 756 பேரில் 7 ஆயிரத்து 858 பேரும், 10 ஆயிரத்து 469 மாணவிகளில் 9 ஆயிரத்து 820 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விட மாணவிகளே முன்னிலை வகித்தனர்.

பிளஸ்-1 பொதுத்தேர்வில் மொத்தம் 39 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. இதில் அரசு பள்ளியில் அம்மாபட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற 38 பள்ளிகளும் தனியார் பள்ளிகள் ஆகும்.

ஆர்வமுடன் பார்த்தனர்

தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்த விவரம் அந்தந்த பள்ளிகளில் அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டன. பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் தற்போது அதே பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகின்றனர். இதனால் தேர்வு முடிவுகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பட்டியலை வைத்து ஆசிரியை ஒருவர் அந்த விவரத்தை கூறினார். மேலும் சிலர் செல்போனில் இணையதளம் மூலமாக தேர்வு முடிவுகளை பார்த்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments