புதுக்கோட்டை மக்களுக்கு ஒரு நற்செய்தி! செகந்திராபாத் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு.
வரும் ஜுலை 29 ஆம் தேதியுடன் சிறப்பு ரயிலின் சேவை நிறைவடைய உள்ள நிலையில், செப்டம்பர் 30 வரை சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரயில்வே கால அட்டவணை வெளியாகவில்லை. வரும் அக்கோடபர் 01 முதல் புதிய ரயில் கால அட்டவணை வெளியாகலாம் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே வட்டாரங்களால் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த சிறப்பு ரயிலின் சேவை செப்டம்பர்  இறுதி வரை மட்டுமே நீடிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கும்போது இந்த ரயில் நிரந்தர ரயிலாக மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருப்பாதாகவே அறிந்துகொள்ளமுடிகிறது! 

எனவே புதுக்கோட்டை மக்கள் அனைவரும் இந்த நீடிக்கப்பட்டுள்ள சேவையை இருமார்க்கங்களிலும் ஆக்கப்பூர்வமாக வரும் மாதங்களில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments