கோபாலப்பட்டிணத்தில் பெண்களுக்கான 5-ஆம் ஆண்டு திருக்குர்ஆன், ஹதீஸ் போட்டி: ‘என்றும் உதவும் கரங்கள்’ அறக்கட்டளை அறிவிப்பு



புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டிணம் ‘என்றும் உதவும் கரங்கள்’ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில், புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு பெண்களுக்கான ஐந்தாம் ஆண்டு திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் கேள்வி-பதில் போட்டி நடைபெற உள்ளது.

​இது குறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

​மேன்மை பொருந்திய ரமலான் மாதத்தில் உலக மக்களுக்கு வழிகாட்டியாக இறக்கப்பட்ட திருக்குர்ஆனை மக்கள் வாசிக்கவும், மார்க்கத்தோடு தங்களை தொடர்புபடுத்திக் கொள்ளவும் இந்த போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் பெண்களின் மார்க்க அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஐந்தாம் ஆண்டு போட்டியாக இது அமைகிறது.

போட்டி விவரங்கள்:

  • வினாத்தாள் வெளியீடு:நாளை பிப்ரவரி 24 (செவ்வாய்க்கிழமை) காலை 10:00 மணிக்கு வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக கேள்விகள் வெளியிடப்படும்.
  • பதில் சமர்ப்பிக்க வேண்டிய நாள்: வரும் மார்ச் 10 (செவ்வாய்க்கிழமை) இரவு 9:00 மணிக்குள் பதில் தாள்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • சமர்ப்பிக்கும் முறை: இரவுத் தொழுகை நடைபெறும் பள்ளிவாசல்களில் வைக்கப்பட்டுள்ள சிறப்புப் பெட்டிகளில் பதில் தாள்களைப் போட வேண்டும்.

முக்கிய விதிமுறைகள்:

  1. ​இந்தப் போட்டியில் கோபாலப்பட்டிணத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
  2. ​ஒரு குடும்பத்தில் (தாய், மகள், மருமகள் என) ஒருவர் மட்டுமே பதில் தாள் சமர்ப்பிக்க வேண்டும்.
  3. ​வினா எண்ணையும் கேள்வியையும் முழுமையாக எழுதி, அதற்கான பதிலைச் சுருக்கமாக எழுத வேண்டும். (முழு ஹதீஸையும் எழுதத் தேவையில்லை).
  4. ​ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் எழுதினாலோ அல்லது ஒரே சாயலில் பல பதில் தாள்கள் இருந்தாலோ அவை நிராகரிக்கப்படும்.
  5. ​பதில் தாளில் போட்டியாளரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர் மற்றும் தொடர்பு எண் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
  6. பதில் தாள்கள் தவறினால் குழு பொறுப்பேற்காது.
  7. இந்தப் போட்டியில் விதிமுறைகள், நிபந்தனைகளில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்களை ஏற்படுத்தவும், தவறு ஏதும் இருக்கும் பட்சத்தில் முன் அறிவிப்பின் பதில் தாளை நிராகரிக்கும் அதிகாரத்தையும் அறக்கட்டளை கொண்டுள்ளது.
  8. பரிசுக்கு உட்பட்டு வரும் போட்டியாளர்களின் பதில்தால்கள் ஒரே குடும்பத்தினரா ஒரே சாயலில் இரண்டு அல்லது மூன்று பதில் தாள்கள் இருக்கும் பட்சத்தில் அந் பதில்தால்கள் காரணம் இன்றி நிராகரிக்கப்படும்.
  9. இன்ஷா அல்லாஹ் தயாராக இருங்கள்! இன்றே குர்ஆனை திறந்து இறை வசனங்களை உற்று நோக்குங்கள்! அதை மனதில் நிலை நிறுத்தி தங்களது அன்றாட வாழ்க்கையில் அமல்படுத்துங்கள்!
  10. அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனுடைய மார்க்கத்தில் தெளிவையும் எந்நிலையிலும் அதை பின்பற்றி நடக்கும் நற்பாக்கியதையும் அவனுக்காக மட்டும் செய்யும் தூய எண்ணத்தையும் தந்து அருள் புரிவானாக !
  11. அல்லாஹ் நமது இயலாமைகளையும் தவறுகளையும் மன்னித்து நமது இந்த சிற முயற்சியை அங்கீகரித்து மறுமையில் அதன் கூலியை முழுமை யாக தந்தருள் புரிவானாக.

பரிசுகள்:

​சிறப்பாகப் பதிலளிப்பவர்களில் முதல் மூன்று வெற்றியாளர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும், பங்கேற்கும் மற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்படும். விதிமுறைகளில் மாற்றம் செய்யவும், தவறுகள் இருப்பின் பதில் தாள்களை நிராகரிக்கவும் அறக்கட்டளைக்கு முழு அதிகாரம் உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​மேலதிக விபரங்களுக்கு +91-74189 64895, 93447 94989 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறக்கட்டளை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...




Post a Comment

0 Comments