மீமிசல் காவல் நிலையம் அருகே பயணிகள் நிழற்குடை அடிக்கல் நாட்டு விழா
மீமிசல் காவல் நிலையம் அருகே  பயணிகள் நிழற்குடை அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் பகுதியில் 5000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தற்போது வரை மீமிசல் காவல் நிலையம் அருகே  பேருந்துகாக காத்திருந்து பட்டுக்கோட்டை & இராமநாதபுரம் மார்க்கமாக தினமும் பயணம் செயகின்றனர். குறிப்பாக பட்டுக்கோட்டை மார்க்கமாக அதிமாக பயணம் செய்கின்றார்கள் ஜெகதாப்பட்டிணம் ,கோட்டைப்பட்டிணம் ,அம்மாபட்டினம் , மணமேல்குடி, கிருஷ்ணாஜிப்பட்டிணம் ,கட்டுமாவடி போன்ற ஊர்களுக்கு தினமும் கோபாலப்பட்டிணம் மக்கள் அதிகமாக பயணம் செய்கின்றார்கள்

 இதனால், அப்பகுதி மக்கள் பேருந்துக்காக வெயில் காலத்தில் வெயிலிலும், மழை காலத்தில் மழையிலும் நின்று பேருந்து ஏறிச் செல்லும் அவலம்  பல காலங்களாக நீடித்து வந்தது  சம்பந்தபட்ட அதிகாரிகள்  நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென 
 பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து இருந்தார்கள் 

இந்நிலையில் இன்று காலை 07-09-2022 புதன்கிழமை அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில்    புதிய  நிழற்குடை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

 இதில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன்(MLA), காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், கோபாலப்பட்டிணம் ஜமாஅத்தார்கள், அரசியல் மற்றும் சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள்  மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பல வருடங்களாக கோபாலப்பட்டிணத்தில் உள்ள அரசியல் கட்சிகள்,பொதுநல அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக முயற்சி செய்த & உதவி செய்த அனைவருக்கும்
GPM மீடியா டீம் & ஊர் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments