KSR பெங்களூர் சேலம் திருச்சி வழியாக மைசூர் - மயிலாடுதுறை - விழாக்கால வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் - தென் மேற்கு ரயில்வே அறிவிப்பு




KSR பெங்களூர் சேலம் திருச்சி வழியாக மைசூர் - மயிலாடுதுறை -  விழாக்கால வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் - தென் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

கர்நாடக மாநிலம் மைசூர் - மயிலாடுதுறை - மைசூர் விழாக்கால வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 8 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 




வண்டி எண் 06251 மைசூர் - மயிலாடுதுறை

▪️ வண்டி எண் 06251 மைசூர் - மயிலாடுதுறை வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் 28 முதல் நவம்பர் 18 வரை (28.10.2022, 04.11.2022, 11.11.2022 மற்றும் 18.11.2022 ஆகிய தேதிகளில் 4 சேவைகள்) வெள்ளிக்கிழமைகளில் மைசூரில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் சனிக்கிழமை மாலை 03.30 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.  

வண்டி எண் 06252 மயிலாடுதுறை - மைசூர் 

▪️ வண்டி எண் 06252 மயிலாடுதுறை - மைசூர் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 19 வரை (29.10.2022, 05.11.2022,12.11.2022 மற்றும் 19.11.2022 ஆகிய தேதிகளில் 4 சேவைகள்) சனிக்கிழமைகளில் மாலை 06.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு மைசூர் சென்றடையும். 

வழி: பெங்களூரு, பெங்களூர் கண்டோன்மெண்ட், கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம்

மேலும் இந்த ரயிலுக்கான முன் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது









நன்றி : சிவபிரகாஷ்   ரயில்வே அப்டேட்ஸ்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments